சனி, 2 ஜூன், 2012

பெரியார் திடல் வை.கலையரசன் நடித்த படம் உள்பட தமிழக மாணவர்களின் 4 குறும்படங்கள் கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடல்


பெரியார் திடல் வை.கலையரசன் நடித்த படம் உள்பட தமிழக மாணவர்களின் 4 குறும்படங்கள்
கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடல்

கோவா, நவ.30-கோவாவில் கடந்த நவம்பர் 23-ஆம் தொடங்கி, 42-ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இயங்கிவரும் மூன்று முக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர் களின் படைப்புகள் திரையிடலுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டு (நவம் பர் 28) திரையிடப் பட்டன. சென்னையில் இயங்கிவரும் எம்.ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவ னத்தில் பயிலும் மாண வர்களின் நான்கு குறும் படங்கள் விழா நடை பெறும் மக்கினஸ் பேலஸ் அரங்கில் திரை யிடப்பட்டன. டி.சுரேஷ் குமார் இயக்கிய கருக்கு, கண்ணன் இயக்கிய அச்சுப்பிழை, சுவிக் குமாரின் இயக்கத்தில் முகாரி, பாக்கியராஜ் இயக்கிய பாட்டி நா ஆகிய நான்கு குறும் படங்கள் பெரும் வர வேற்பைப் பெற்றன. திரைப்படக்கல்லூரி பேராசிரியர் வி.எம். ரவிராஜ், மாணவர்கள் சுரேஷ்குமார், மோகன் ஆகியோர் திரையி டலின் போது நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக் கப்பட்டனர். இவற்றில் அச்சுப்பிழை என்ற படத்தில் கதாநாய கனாக வடசென்னை மாவட்ட தி.க இளை ஞரணி செயலாளர் வை.கலையரசன் நடித்தி ருந்தார்.
முன்னதாக திரை யிடலையொட்டி நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பன்னாட்டுத் திரைப்பட விழாவில் மாணவர்களின் படைப்புகளுக்கும் தனி இடம் அளித்தது மகிழ்ச் சிக்குரியது. மத்திய அரசின் செய்தி ஒளி பரப்புத் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா, புனே திரைப்படக் கல் லூரிகள் மட்டு மல்லா மல், முழுக்க முழுக்க தமிழக அரசால் மட்டு மே நடத்தப்படும் மிகவும் பழைமைவாய்ந்த எம்.ஜி.ஆர்.அரசு திரப் படக் கல்லூரிக்கும் இந்த சிறப்பு வழங்கப்பட்டி ருப்பது பெருமைக்குரிய தாகும். இதற்கென அமைக்கப்பட்ட குழு வின் பொறுப்பாளர் சென்னைக்கு வந்து, படங்களைப் பார்த்து தேர்வு செய்தார் என்று பேராசிரியர் வி.எம். ரவிராஜ் தெரிவித்தார். கடந்த 22-ஆம் தேதி முதல் 30-க்கும் மேற் பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று வருகிறார் கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தமிழ கத்திலிருந்து நடிகை ரேவதி, தசாவதாரம் கலை இயக்குநர் பிர பாகரன் ஆகியோர் இயக்கிய குறும்படங் களும் திரையிடப் பட்டன. தமிழக மீனவர் பிரச்சினையையொட்டி லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் என்ற திரைப்படம் இந் தியன் பனோரமா பிரி வில் இடம்பெற்றுள்ளது.

சனி, 26 மே, 2012

சமச்சீர் கல்வி



சமச்சீர் கல்வி முறையை மாற்ற முடியாதபடி அமைந்துவிட்டது உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு! அதனால் தான் 1, 6- ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்ட நூல்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிற வகுப்புகளுக்கான பாடங்கள் சரியில்லை என்று தமிழக அரசு சொல்வதால் அவற்றை ஆராயக் கல்வியாளர் களைக் கொண்ட குழு அமைத்து அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றோர் யார் தெரியுமா? அத்தனையும் அவாள்கள் _- அரசு அதிகாரிகள் இருவரைத் தவிர! மத்திய பாடத்திட்டக் குழுவில் இருந்து இடம்பெற்றோரில் ஒருவர் பார்ப்பனர். மற்றொருவர் மதத்தையும், கல்வியையும் பிரிக்கக்கூடாது என்று கட்டுரை எழுதிய அனில் சேத்தி என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். சரி, கல்வியாளர்களைக் கொண்ட குழு என்று இவர்கள் சொன்ன பட்டியலில் இருந்தவர்கள் பிரபலமான கல்வி வியாபாரிகளே அன்றி கல்வியாளர்கள் அல்லர். ஒன்பது பேர் கொண்ட குழுவில் ஒரே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் கூடக் கிடையாது. ஏன், அரசு ஆசிரியர்கள் யாருக்கும் இந்தக் குழுவில் இடம்பெறும் தகுதி கிடையாதா? தனியார் பள்ளி முதலாளிகள் எல்லாம் நெய்யில் பொரித்தவர்கள்.. நாங்கள் என்ன குருடாயிலில் பொரித்தவர்களா? என்று எந்த அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பும் கேட்கவில்லை. அத்தனை லட்சம், இத்தனை லட்சம் ஆசிரியர்கள் என்றெல் லாம் கூட்டம் போடுவது பஞ்சப் படி, பயணப் படிக்குத்தானா என்று தெரிய வில்லை.
வெட்கம்..வெட்கம்! ஆக மொத்தம் அக்கிரகாரக் குழு கூடி, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பற்றி ஆராய்ந்தது... நரிகள் கூடி நண்டு நல வாரியம் அமைத்தது போல! நான்கு வருணத்துக்கும், நான்கு பாடத்திட்டம் என்பது போல ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டம் என இருந்ததை மாற்றியாகி விட்டது. அதை ஒன்றும் செய்ய முடியாது. கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்ற பதட்டத்தில் இருந்தவர்கள், பாடத்திட்டத்தில் சமூக அக்கறையோடு இருக்கும் பகுதிகளை அனுமதிப்பார்களா?
கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்தில் படிப்பவனும், என் பிள்ளையும் ஒரே பாடத்தைப் படிப்பதா என்ற மேட்டிமைத் திமிர், பார்ப்பனத் தனம், ஏற்கெனவே இருக்கும் பிரிவினைகளைத் தகர்த்துவிடுமோ என்று இவர்களின் கோபங்களைக் கிளறியிருக்கிறது. இதுவரை வரலாற்றுப் பாடத்தில் சேர, சோழர், பாண்டியர் காலத்துக்குப் பிறகு தமிழகத்துக்கென்று வரலாறே இருக்காது. நீதிக் கட்சி என்ற வார்த்தையை பாடத்தில் பார்க்கவே முடியாது. சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் பட்டியலில் ஆரிய சமாஜத்தின் பெயர் தான் இருக்கும். பூலேவும், சாகுமகராஜும், நாராயணகுருவும், அம்பேத்கரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரையும் சேர்த்து தந்தை பெரியாரின் பெயரையும் வேறு சமச்சீர் கல்வியில் சேர்த்துவிட்டால் பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு!
பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, தியாகராயர், டி.எம்.நாயர், முத்துலெட்சுமி ரெட்டி இன்னும் சமூக சீர்திருத்தத் தலைவர்கள் பற்றிய பாடங்களைத் தூக்க பரிந்துரைத்துள்ளது அக்கிரகாரக் குழு! பாடத்திட்டத்தில் தரம் இல்லை என்று சொல்லும் இவர்கள், பெரு வெடிப்புக் கொள்கை போன்றவற்றை கிராமப்புற மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? அவர்களின் தரத்துக்கு மிஞ்சியதாக இருக்கிறது என்று நீலிக் கண்ணீரும் வடித்துள்ளது.
ஒருபக்கம் பாடத்திட்டத்துக்குத் தரமில்லை என்பது...! இன்னொரு பக்கம் பாடத்தைப் படிக்க மாணவர்களுக்குத் தரமில்லை என்பது! எத்தனை திமிர்? எத்தனை வேடம்? கிராமப்புற மாணவர்களுக்குப் படிக்கத் தகுதியில்லை என்று சொல்லுவதற்கு எவ்வளவு ஜாதித் திமிர் இருக்க வேண்டும்?
இதைக் கண்ட திராவிடர் கழக மாணவரணி கொதித்தெழுந்தது.
தமிழக அரசு அமைத்த அக்கிரகாரக் குழுவின் அறிக்கையை, எந்த அண்ணாவையும், பெரியாரையும் மறைக்கத் துணிந்தார்களோ, அதே அண்ணா பெயரிலமைந்த சாலையில், பெரியார் சிலையருகே கொளுத்தி முழக்கமிட்டனர் திராவிட மாணவர்கள். உடனடியாகக் கூடி அக்கிரகாரக் குழு அறிக்கையைக் கொளுத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் மு.சென்னியப்பன், வை.கலையரசன், பரந்தாமன், விஜயகுமார், கார்த்திக் ஆகிய 5 பேர் மேல் மட்டும் வழக்குத் தொடுத்து 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உடனடியாகப் பரவிவிட்டது தீ!
தஞ்சை, உரத்தநாடு என்று பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் அக்கிரகாரக் குழுவின் அறிக்கையைத் தீக்கிரையாக்கினர்.
இன்னும் பரவும் இந்தத் தீ! அன்று குலக்கல்விக்கு எதிராக பெரியார் பரவ ஆணையிட்ட தீ, இன்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாய்ப் பரவட்டும்!
கல்வியில் கைவைத்த யாரும் தமிழ்நாட்டில் நிலைத்ததாய்ச் சரித்திரமில்லை!
குல்லூகப்பட்டர் ராஜாஜி ஓடி ஒளிந்த சரித்திரம் பாடப் புத்தகங்களில் இடம் பெறவில்லை. ஆனால், மக்கள் மனங்களில் அழியாமல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், பாடப் புத்தகத்தில் வருணபேதம் உண்டாக்கும் ராஜாஜியின் வாரிசுகள் ஒழிந்த வரலாறு நாளை வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறும்.
அதற்கான தீ பரவட்டும்! பரவட்டும்!!

வியாழன், 17 மே, 2012


பெர்ட்ரசண்ட் ரசல்


உலக நாத்திக அறிஞர் பெர்ட்ரசண்ட் ரசல் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (18.05.1872).
உயர் எண்ணங்களை - சிந்தனை வித்துகளை உல கிற்கு வாரி வழங்கியவர். அவருடைய கருத்துகள் பல தொகுதிகளாக வெளிவந் துள்ளன. அவை காலத்தை வென்று நிற்கக் கூடிய ஒளி முத்துகள்!
பிரிட்டீஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் சார்பில் உட்ரோ உவையட் என்பவர் ரசலிடம் கண்ட பேட்டி 13 தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.
உவையட்: ஒரு நம்பிக் கையை அல்லது மதத்தைப் பின்பற்றவேண்டும்; இன்றேல் வாழ்க்கையை எதிர் நோக்க முடியாது என்று கூறும் மக்கள் என்ன ஆவது?
ரஸலின் பதில்: ஒரு வகையான கோழைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாக உணரும் மக்கள் வேறு எந்தத் துறையிலும் வெறுக்கத்தக்கவர்களாகவே கருதப்படுவார்கள். ஆனால், மதத்துறையில் காணப்படும்போது, அது பாராட்டத்தக்கதாக நினைக் கப்படுகிறது. கோழைத்தனம் எந்தத் துறையில் காணப்பட்டாலும் நான் அதைப் பாராட்ட முடியாது.
உவையட்: ஆனால், நீங்கள் அதைக் கோழைத் தனம் என்று கூறுகிறீர்கள்!
ரஸலின் பதில்: இது இல்லாமல் அது இல்லாமல் வாழ்க்கையை எதிர்த்து நிற்க முடியாது என்று கூறு வதற்காக சொல்கிறேன். வாழ்க்கை எதை அவர்களுக்குத் தந்தாலும் ஒவ் வொருவரும் வாழ்க்கையை எதிர்த்து நிற்கக் கூடியவர் களாக இருத்தல் வேண்டும்.
உவையட்: அப்படியானால், மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைக் கடவுளின் மேலோ, பூசாரியின் மீதோ அல்லது அமைப்பாக உள்ள மதத்தின்மீதோ போட்டு விடுகிறார்கள்; அவர்களாகவே பிரச்சினைகளை சமாளிப்பதில்லை என்ற அர்த்தத்தில் அதைக் கோழைத்தனம் என்று கருதுகிறீர்களா?
ரஸலின் பதில்: ஆமாம், உலகில் உள்ள மிக ஆபத்தான நிலைபற்றிய பிரச்சினையை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆகா, கடவுள் அதைக் கவனித்துக் கொள்வார் என்று கூறும் கடிதங்கள் எனக்கு எப்பொழுதும் வருகின்றன. ஆனால், கடவுள் கடந்த காலத்தில் ஒரு போதும் அப்படிக் கவனித்துக் கொண்டதில்லையே, ஆனால், வருங்காலத்தில் கடவுள் கவனித்துக்கொள்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
இவ்வாறு பகுத்தறிவின் அடிப்படையில் தர்க்கப்போர் புரிந்த மேதைதான் ரஸல்.
98 ஆண்டுகாலம் வாழ்ந்து காட்டியும் உள்ளார். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனித்த சிந்தனைகளால் அந்தச் சூழல் விலங்கு களை உடைத்தெறிந்து என் றென்றும் ஒளிவீசித் திகழும் அந்தப் பெரு மகனின் பகுத்தறிவுச் சிந் தனைகளைப் போற்று வோம்!