ஞாயிறு, 14 நவம்பர், 2010

பெரியார் பட்டம்


1938 நவம்பர் இதே நாள் (14) தமிழ்நாட்டின் வரலாற்றில் வீரஞ் செறிந்த ஒப்பரும் நாள். இந்நாளில் தான் இந்தி எதிர்ப்புக் களத்தில் பெண்கள் முதன் முதலாகப் போர்க்கோலம் பூண்டு, மறியல் செய்து சிறைக்கோட்டம் சென்ற மயிர்க் கூச்செறியும் மகத்தான நாள்.
இதற்கு முதல் நாள் தான் (13.11.1938) சென்னை ஒற்றைவாடை அரங்கில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறை மலை அடிகளாரின் மகள்) மாநாட்டின் தலைவர். தோழியர் மீனாம்பாள் சிவராஜ் தமிழ்க்கொடி உயர்த் தினார். பண்டிதை நாரா யணி அம்மையார் மாநாட் டைத் திறந்து வைத்தார். தாமரைக்கண்ணி அம்மை யார் வரவேற்புரையாற்றினார். நாகம்மையார் படத்தினை தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார். டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர் கலந்து கொண் டனர்.

அம்மாநாட்டில் தான் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருந்த தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதா லும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப் பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும் என்று முதல் தீர்மானமாக நிறை வேற்றப்பட்டது. அம்மா நாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.
நவம்பர் 14 (1938) இதே நாளில் சென்னை பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து, டாக்டர் தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத் தம்மையார், பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்), சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாஜிகல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப் பட்டனர் - கைது செய்யப் பட்டனர். நீதிபதிகள் எவ் வளவோ கேட்டுக் கொண் டும் முன் வைத்த காலை பின் வைக்க மறுத்தனர் வீரத்தாய்மார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட் டுக் கொண்டே இருந்தனர்.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற வீரப் பெண்கள் 73 பேர்; அவர் களுடன் சென்ற குழந் தைகள் 32 பேர்.
தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் பெண்கள் போர்க் கோலம் பூண்டு சிறைக் கோட்டம் ஏகியது என்பது இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான்.
இந்நாளை எப்படிதான் மறக்க முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக