சனி, 5 பிப்ரவரி, 2011

மகனை இழந்த வருத்தமும் மறைந்தது-வீர நடராசன் தந்தையார் விண்ணப்பம்


திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்கள் திராவிட தனி மொழியாம் தழிழைக் கெடுத்து நமது தாய் நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி சய்து சுமத்தின் இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய் நாட்டின் நலங் கருதி எதிர்த் தொழில் எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன் என்னிடம் கேட்டபோது, நான் மன மகிழ்ந்து ஒத்துக் கொண்டேன். அப்பெரும் போர்ப் புயலில் எனது மகன் 15.1.1939-ல் மாண்டான் என்ற செய்தி கேட்டு மனம் நொந்து மதி மயங்கி வாழ்ந்து வந்தேன். அந்த துக்கச் செய்திக்குப்பிறகு ஓராண்டுக்கு மேற்சென்று அதன் பிறகு தாய் நாட்டில் பல மாறுதல்கள் கண்டேன் எனது மனம் மட்டும் ஆறுதலடையவில்லை.
2.2.1940  பத்திரிகைச் செய்தியை பார்த்ததும் நான் எனது வாழ்நாளில் அடைய முடியாததும் அடைந்திராததுமான மகிழ்ச்சியுற்றேன், சர்க்காரின் பிடிவாதத்தை தகர்த்து கட்டாய இந்தியை ஒழித்தது எனது மகனும் அவனைப் போன்ற ஆயிரக்கணக்கான வாலிபர்களும் சய்த தியாகம் அல்லவா என்பதை நினைத்த போது நான் அடைந்த களிப்பை என்னென்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கேற்ப நமது திராவிட மக்கள் தாய் நாட்டிற்காக வெற்றி காணும் வரை உழைத்து வெற்றி கண்டு மகிழ்வதற்கு கட்டாய இந்தி நுழைவு, தமிழர் அறப்போர், திராவிடர் சிறைபுகல் நடராசன் தாலமுத்து மரணம், பெரியார் கர்ஜனை, கட்டாய இந்தி ரத்து முதலிய சரித்திர சம்பந்தமான உண்மைகளை மகிழ்ச்சியோடு எடுத்துக்காட்டுகிறேன். நாம் தொடுத்த போராட்டம் முடிந்துவிட்டது. இனி அதில் நுழைய வேண்டியதில்லை. என்றிருக்க வேண்டாம். இனியும் போர் இருக்கிறது. அவைகளிலும் தங்களது கட்டுப்பாடும் உழைப்பும் உதவியும் ந்து திராவிடர்களின் வெற்றிக் கொடியை நாட்டவேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். திராவிடம் வாழ்க! ஆரியம் வீழ்க!
இங்ஙனம்,
கோ. லட்சுமணன்
குடிஅரசு - பெட்டி செய்தி - 03.03.1940

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக